Tuesday, January 12, 2021

சார்கமும் சங்கும்

 ரங்கராஜன் இன்றைய thinamalarudan திண்ணையில் அமர்ந்தார். ராஜாராமன் வேகமாக சென்று கொண்டு இருந்தார். 

ராஜாராம என்ன இப்படி அவசரம்

ரங்கா காஃபி power காலி. ஒரே பாட்டு. இரு காபி பவுடர் வாங்கி ஆத்ல கொடுத்துட்டு வரேன.

ரங்கராஜன் சிரித்தார்.  சீக்கிரம் போய் வாங்கிண்டு வா.

ராஜாராமன் காபி பவுடர் வாங்கி வந்து காபி போட சொன்னார். 

ஒரு நிமிஷம். போட்டு தரேன். சரஸ்வதி சொல்லிவிட்டு காபி போட சென்றாள். சூட சூட காபி. ராஜாராமன் காத்திருந்தார்.காபியும் வந்தது. 

சரசு ரங்காவை பார்த்து விட்டு வருகிறேன். ராஜாராமன் ராங்கராஜன் வீட்டுக்கு வந்தார். 

என்ன ராஜாராம காபி குடித்து முடிந்ததா?

ரங்கா அது இருக்கட்டும். இன்றைக்கு ஒரு உபண்யாசததில் சார்னகமும் சங்கும் என்று சொன்னார். அதன் தாத்பரியம் என்ன.

ரங்கராஜன் ஒரு நிமிடம் யோசித்தார். அது ராமாயணமும் பாரதமும் என்றார். ராஜாராமன முளித்தார். என்ன ராமாயணமும் பாரதமும். ஒன்றும் புரியவில்லை.

ரங்கா புரியர மாதிரி சொல்லு.

ராஜாராம இராவணன் சீதையை சிறை பிடித்து வைத்தான். அவள் மனம் கவர எத்தனையோ யுக்திகள் செய்தான். ஒன்றும் முடியவில்லை. உடன் ஒரு நாள் மாயை மூலம் ஶ்ரீ ராமன் தலையை கையில் பிடித்து சீதை முன் நின்றான். அதை பார்த்த சீதை மிக பெரிய  அதிற்சசி ஏற்ப்பட்டது. அது ஶ்ரீ ராமன் மனதில் ஒரு ஷனம் கண்முன் நின்றது. உடன் ஶ்ரீராமன் தனது வில்லை எடுத்து அதன் நான் மூலம் ஒலி எழுப்பினான. அந்த சாரங்கததின் ஓலி சீதையின் காதில் தனியே கேட்டது. அந்த நிமிடம் சீதை தன் கண்களை மூடி ராம நாம ஜபம் செய்தாள். ராம நாமம் ராம சொல் ராம ராம வில் எப்பொழுதும் எவரையும் காக்கும் . சீதையை காததது. 

ருக்மிணி தனதu அபரமிதமான காதலை ஒரு அழகான கவிதையாக எழுதி ஒரு வயதான பிராமண முதியவரிடம் கொடுத்து அதை கண்ணனிடம் சேர்க்க சொன்னாள். சிசுபாலன் ருக்மணி திருமணம் நிச்சயமானது. ருக்மிி கண்ணனை எதிர்க்க தயாரானான். ருக்மணி மனம் முழுவதும் கண்ணனை நினைத்து இருந்தது. ஆனால் ஒரு செய்தியும் வரவில்லை. கண்ணன் ருக்மணியின் காதல் கடிதத்தை படித்து தன்னை மறந்து அமர்ந்தான். 

" கண்ணா இங்கு இருக்கிறாய். நான் உனக்காக இங்கு. என் மனம் உன்னுடன். வா வந்து அழைத்து செல்" திடீரென்று அவன் முன் ருக்மணி இருந்தாள. அந்த ஷனம் கண்ணன் தனது தேரை எடுத்து ருக்மணியை பார்க்க விரைந்தான். நேரம் மிக குறைவு. ஒரு நிமிஷம் யோசித்தார். தனது சங்கத்தை எடுத்து சங்க நாத ஓலி எழுப்பினான கண்ணன். அந்த ஒலி ருக்மணி காதில் அவளது காதலுக்கு விடை கொடுத்தது. மனம் சந்தோசம் அடைந்தது. இந்த சங்கம் பாஞ்ச சண்யம். பாரதத்தில் கண்ணனின் உடன் . 

எனவே தான் சாரங்கமும் சங்கும் என்றால் ராமாயணமும் பாரதமும். இதை ஆண்டாள் அவளதu திருப்பாவையில் கூறுகிறாள் என்றார் ரங்கராஜன். 

ராஜாராமன் மன நிறைவோடு சென்றார்.

ஶ்ரீவி. பிரபு.

12.1.2021








Sunday, December 20, 2020

எட்டு

 அதிகாலை ஆறு மணி.

J P park . மக்கள் நடை பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள்.ராஜாராமன் பார்கில் நுழைந்தார். முகம் தவிர எல்லாம் ஸ்வெட்டர். குளிர் அதிகம். நடையை மிக நிதானமாக ஆரம்பித்தது மேலும் வேகமாக நடக்க ஆரம்பித்தார். மூலிகை பார்க் வந்ததும் அதனுள் நுழைந்து வெளியே வந்தார். எதிர் வரிசையில் புதிய பலகை இருந்தது.

"எட்டு பயிற்சி இடம். காலணிகளை விட்டுவிட்டு உள்ளே வரவும்"  

ராஜாராமன் மனதில் எட்டு ஓடியது. எங்கு போனாலும் எட்டு வருகிறது. காலணிகளை கழற்றி உள்ளே சென்று எட்டு போட்டு நடை ஆரம்பித்தார். ஒரு எட்டு முறை நடந்து வெளியே வந்தார். வானம் இருள் சூழ்ந்தது. வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

ரங்கராஜன் திண்ணையில் பேப்பரும் காபியுமாக அமர்ந்திருந்தார். 

"வா ராஜராமா. என்ன விசேஷம்."

ரங்கா இன்று பார்க்கில் எட்டு பயிற்சி இடம் lஎன்று புதிதாக ஒரு நடை பயிற்சி இடம் ஏற்பட்டு உள்ளது. இந்த எட்டு ஒரே மர்மம். எங்கு போனாலும் எட்டு. 

ரங்கா நான் two wheeler licence போனபோது எட்டு போடுணு சொன்னேன். போட்டேன். டிவி advertisement ஷோ எட்டாம் நம்பர் நல்லது இல்லைனு சொன்னான். என்ன மர்மம் இது.

ரங்கராஜன் சிரித்தார். எட்டு என்பது மிக முக்கியமான ஒன்று. தினம் நம் வாழ்கையில் அது வரும். இது புரியாதவர்கள் அதன் விசேஷம் தெரியாதவர்கள். ரங்கராஜன் யோசித்தார்.

என்ன ரங்கா அதன் விஷயம் என்ன.

ராஜாராம எட்டாம் எண் மிக முக்கியமான ஒன்று. நம் பரந்தாமன் கிருஷ்ணா பரமாத்மா எட்டாம் நாள் எட்டாம் நபராக பிறந்தார்.

அவர் பிறந்த அஷ்டமி திதி எட்டாம் திதி.எட்டாவது குழந்தையாக எட்டாவது சிறையில் அவதாரம் பண்ணினார். அதனால் எட்டாம் எண் மிக சிறந்த எண்.

அந்த பகவா னால் கூறப்பட்ட பகவத் கீதை 701 ஸ்லோகங்களை கொண்டது. அதுவும் எட்டு தான். கிருஷ்ணனின் முக்கியமான சொருபங்கள் எட்டு. குசேலனுக்கு நண்பன் ரம்யத்துக்கு வேனுகாணன், கோபிகைக்கிகு ராசலீலா,பார்த்தனுக்கு சாரதி, கோகுலத்தில் இரட்சகன், பசு மேய்க்கும் இடையன், யசோதை மைந்தான், கீதை நாயகன். இது போல் எண்ணற்ற சொரூபங்கள் உடையவன். அவன் கூறிய திருமந்திரம் அஷ்டக்ஷரம் எட்டு எழுத்து. எட்டின் சொரூபம் அந்த கண்ணன். 

அதனால் எட்டு என்பது நம் வாழ்க்கையில் என்றும் எப்பொழுதும் நிறைந்து இருக்கும்.அதனால் R T O ஆபீசல் எட்டு பொட சொல்வார்கள்.

ஓம் நமோ நாராயணா

ராஜாராமன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ரங்கராஜன்  காபி பேப்பருடன் ஐக்கியம் ஆனார்.

ஶ்ரீவி. பிரபு

20.12.2020






Wednesday, November 25, 2020

அபிமானம்

 ரங்கராஜன் வானத்தை பார்த்தார். ஒரே இருட்டு .மண்டிக்கிடந்தது. நிவர் புயல் என்று ஏதோ சொல்கிறார்கள்.அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ எம்பெருமான் சிந்தனை.

மணியை பார்த்தார். காலை 11மணி. புயல் எங்கோ மையம் கொண்டுள்ளது. Paper காரன் வரவில்லை. 

என்ன ஸ்வாமி என்ன விசேஷம் கேட்டுகொண்டே வந்தார் ராஜாராமன். ரங்கராஜன் பால்ய நண்பர். 

வா ராஜாராமன். ஏதோ புயல் தீவிரமாக வருவதாக சொல்கிறார்கள். உனக்கு ஏதாவது தெரியுமா?

அது பற்றி நானும் டிவி நியூஸ் பார்த்தேன். ரொம்பவும் கஷ்டம். மகாபலிபுரம் ரொம்ப affect ஆகும் என்று சொன்னார்கள்.

அது சரி . நீ வந்த விஷயம் என்ன?

இல்லை ரங்கா. எனக்கு ஒரு சந்தேகம். இந்த சூழ்நிலையில் அபிமானம் என்பதை எப்படி அறிவது. நம் அபிமானம் நம் குடும்பத்தில் உள்ளது. புயல் காற்று வெயில் இது எல்லாம் நாம் கொண்டுள்ள அபிமானத்தில் மனதுக்கு ஒரு வேதனையை தரும் அல்லவா?

ரங்கராஜன் சிரித்தார். என்ன ராஜாராமன் நீ  மஹாபாரதம் படிதததில்லயா? அதில் கண்ணன் விதுரன் சம்பாஷன தெரியாதா?

அதுக்கும் இதுக்கும்  என்ன சம்பந்தம் ரங்கா. கொஞ்சம் விளக்கமாக சொல்

கண்ணன் தூது வரும் பொழுது முதல் நாள் இரவு தங்க வேண்டும் . அதனால் துரியோதனன்

கண்ணனிடம் தனது மாளிகைக்கு வந்து உணவு அருந்தி தங்க வேண்டும் என்றான். கண்ணன் மறுத்து விட்டேன். அப்பொழுது பீஷ்மர் துரோணர் இருந்தார்கள். 

ரங்கா ஏ ன் கண்ணன் மறுத்தான். பின் என்ன செய்தான். 

ராஜாராமன் கண்ணன் அந்த ஶ்ரீமன் நாராயணன். அவன் விதுரணின குடிசைக்கு சென்று உணவு அருந்தினான். அப்பொழுது அவன் கூறியது

பீஷ்மர் அபிமானம் தான் ஒரு பெரிய வீரன் என்ற எண்ணம்

த்ரோணர் அபிமானம் தான் ஒரு பெரிய ஆசான் என்ற எண்ணம்

துரியோதனன் அபிமானம் தான் பெரிய மகாராஜா என்ற எண்ணம்.

ஆனால் விதுரன் பெரிய வேத விற்ப்பண்ணன்.அதில் அவனுக்கு அபிமானம் இல்லை. அவன் பெரிய வில் வித்தை வீரன். அதிலு ம் அவனுக்கு அபிமானம் இல்லை. பெரிய நீதிமான். அதிலு ம் அவனுக்கு அபிமானம் இல்லை. அவனது பக்தி கடலை விட பெரியது. அதிலு ம் அபிமானம் இல்லை. அதனால் தான் நான் அவன் குடிசைக்கு வந்தேன் என்றான் கண்ணன்

ரங்கா அப்படியென்றால் நாம் எதிலும் அபிமானம் கொள்ள கூடாதா?

ஆம் ராஜாராமன். பக்தி வேண்டும் அபிமானம் வேண்டாம்

நல்லது ரங்கா. இப்பொழுது என் மணப்புயல் அடங்கி விட்டது. நிவர புயல் எச்சரிக்கை உள்ளது. நான் வருகிறேன்

ராஜாராமன் வீட்டுக்கு கிளம்பினார்.

 ரங்கராஜன் வானத்தை பார்த்தார். 

ஶ்ரீவி பிரபு

25.11.2020


Thursday, November 19, 2020

முன்னோர் தூது

 ரங்கராஜன் paper படித்துக்கொண்டு இருந்தார். " என்ன ஸ்வாமி என்ன விசேஷம் இன்று பேப்பரில்" கேட்டுக்கொண்டு வந்தார் ராஜாராமன்

வாரும் ஸ்வாமி. எப்பொழுதும் போல அரசியல் அலசல்கள் online classes பள்ளி திறப்பது எப்போது இது தான் செய்திகள்

அப்படியா. நல்லது. சொல்லும் வேறு என்ன விசேஷம். ராஜாராமன் கேட்டார். இது ஒரு மிக நெருக்கமான சம்பஷனை. இருவருமm பால்ய நண்பர்கள். இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி ஆகிவிட்டது

ரங்கா எனக்கு ஒரு சந்தேகம். ஆண்டாள் திருப்பாவையில்  ஶ்ரீ ராமனை மனதுக்கு இணியான் என்று கூறுகிறாள். ஆனால் நம் கண்ணன் போல் ராமன் மிக கீழ் இறங்கி ஐவருக்காக தூது சென்றது போல்  ஶ்ரீ ராமன் செய்தது இல்லை. சிறு குழந்தைகளுடன் விளையாடியது இல்லை. ஆனாலு மஅனைவருமm ராமா ராமா ராமா என்றே அழைக்கின்றனர்.  என் இப்படி" ராஜாராமன் கேட்டார்

ரங்கராஜன் ஒரு சிறிய புன்சிரிப்புடன் அவரை பார்த்தார். "உன் பெயரே ராஜா ராமன். உன் அப்பாவும் ராமனின் பக்தியில் திளைத்தவர். இது பற்றி நீ இத்தனை வருடம் கேட்கவில்லை. இன்று அந்த பகவான் சோதனை செய்கிறான். நல்லது" 

"ஆம் ரங்கா. சொல் தெரிந்து கொள்கிறேன்"

ராஜாராம "

"ராமன் அனுமனை தூது அனுப்பினான். அனுமன தூது சென்று கண்டேன் சீதையை என்றான். தூதுவன் அனுமன் ராமனின் மனதில் நீங்கா இடம் பெற்றான். அப்பொழுது ராமனின் மனதில் தோன்றியது ஒரு தூதுவன் கைங்கர்யம் எல்லாத்தையும் விட சிறந்தது என்று" தான் ஒரு சக்ரவர்த்தி என்பதால் தன்னை யாரும் தூது செல்ல கூறாவில்லை என்று அந்த சக்ரவர்த்தி திருமகனுக்கு தோன்றியது"

எங்கும் அனுமனின் பிரபல்யம் ராமனை விட அதிகமாக இருந்தது. அது தூது சென்றான் என்ற ஒரு பெரிய kainkaryamaakaa தோன்றியது

ரங்கா அப்படியென்றால் ராமனை அணுகுவது கடினமா?"

இல்லை ராஜாராமன். அவன் அனைவர் மனதுக்கும் இனியான்.அதனால் தான் ராமா அவதாரத்தில் தாசரதி மனம் எப்படி  தூதுவனாக செல்வது என்று தோன்றியது

அதனால் தான் தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில் யாதவனாக பிறந்து ஐ வருக்காக தூது சென்றான். இதை பராசர பட்டார் பெரிய திருமொழி திருமங்கை ஆழ்வார் பாசுரம் எவ்வுள் கிடந்தான் வீர ராகவன் வைத்திய ராகவன் மூலம் தெரிவிக்கிறார்

"முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து

அரக்கன்  மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து 

அவனே பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி, பெருநிலத்தார்  இன்னார்தூதன் என நின்றான் எவ்வுள் கிடந் தானே"

ராஜாராம ஶ்ரீ ராமன் கண்ணனாக வந்து அந்த தூதுவன் கைங்கர்யம் செய்வித்தான்.

ரங்கா மனதுக்கு நிறவு ஏற்ப்பட்டது. அதனால் தான் அவன் மனது இணியாண் என்று ஆண்டாள் கண்ணன் மூலம் ராமனை பார்க்கிறாள்.  சரி மீண்டும் பார்க்கலாம்

ராஜாராமன் கிளம்பிவிட்டார்.

ஶ்ரீவி பிரபு

18.11.2020


Thursday, October 29, 2020

அமானவன்

 காலை மணி மூன்று

ஏதோ ஒரு எண்ணத்தில் எழுந்து பாத்ரூம் சென்று வந்தேன். சரி mobile பார்ப்போம் என்று whatsup open செய்து WE FRIENDS group ஓபன் ஆனது. ஒரே ஷாக். திரும்பவும் படித்தேன் படித்தேன்.

"நமது ஆருயிர் நண்பன் மனோகரன் இன்று மாலை 6 மணிக்கு இறைவன் அடி சேர்ந்தார்"

ஒரே ஷாக். எப்படிப்பட்ட நண்பன். இந்த வருடம் feb மாதம் மற்ற  ஒரு நண்பனின் மகன் திருமண விழா வரவேற்புக்கு  அனைவரும சந்தித்தோம். மனோகரன் எப்பொழுதும் போல் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி. " என்னடா கால் வலி சரியா இல்லை இன்னும் வலி  உண்டா"

இன்னும் இருக்குடா. உங்கர்ந்த எழுந்துக்க கஷ்டம். நடந்த கஷ்டம் 

அதே புன் சிரிப்பு. அந்த அருமையான கருமையில் வெள்ளை சிரிப்பு. அது அவனின் trade mark.. எல்லோரும் உட்க்கார்ந்து பேசினோம்.பேசினோம்.பேசிக்கொண்டே இருந்தோம்..நட்பு என்பது எல்லாவற்றையும் தாண்டி அதற்கும்  மேலே அதற்கும்  மேலே மேலே மேலே. எங்களது நட்பு 50 வருட காலம் இணைந்து வருவது.

இன்று காலை அந்த நண்பன் மனோ இல்லை. இல்லவே இல்லை. அந்த வைகுண்ட வாசியாகிவிட்டன். அவனை அந்த அமானவான் வைகுண்ட நாதனிடம் அழைத்து சென்று உள்ளான்.இந்த அமானவன் நம் கோயில்களில் ஜய விஜயன் முன்பாக இருப்பான். அவன் எல்லோரையும் அழைப்பதில்லை. அந்த நாதன் கூறும் இதயத்தை மட்டும் தன்னுடன் அழைத்து செல்வான்.அவன் அமானவன்.

ஸ்ரீவி பிரபு

29.10.2020


Sunday, October 18, 2020

கைரேகை

வருடம் 1961 தை மாதம் ரங்கன் 40 மூட்டை நெல் சேர்த்து கூட்டுறவு சேமிப்பு கிடங்கு வந்தான். " வா ரங்கா . என்ன இந்த வருடம் நல்ல போகமா?" கூட்டுறவு கிடங்கு அதிகாரி ராஜன் வினவினார் ஆமாம் சாமி. நல்ல போகம். ஏக்கருக்கு 12_14 மூடை தேரும். நல்லது. அந்த கோடு போட்ட இடத்தில அடுக்கி வை. ரங்கன் 40 நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தான். சாமி ஒரு டீ சாப்ட்டு வந்துறேன என்று கூறி ரங்கன் எதிரே இருந்த டீ கடைக்கு சென்று டீ order செய்து அங்குள்ள மக்களிடம் நாட்டு நிலவரம் கேட்டான். "இதற்கு தான் நாலு எழுத்து படிக்கணும் சொல்றது" யாரோ ஒருவர் கூறினார். இவனும் ஆமாம் சாமி" என்று கூறி ஏதோ எம் மவன் படிக்கிறான் என்று சொல்லி கிளம்பினான் " ரங்கா இங்க வா. வந்து உன் கைரேகை போடு" அதிகாரி ராஜன் கூறினார். சரிங்க என்று ரங்கன் தன் இடது கட்டை விரல் கைரேகை போட்டு ரசீது பெற்றுக்கொண்டார் " ரங்கா கையெழுத்து போட கற்றுக்கொள். இணிமீது கையெழுத்து போட வேண்டும்" ராஜன் கூறினார் எனக்கு எதுக்கு சாமி கையெழுத்து. நம்ம கைரேகை ரொம்ப உயர்ந்தது . வாரேன் சாமி" ரங்கன் வீட்டை நோக்கி புறப்பட்டான் வருடம் 2019 April மாதம் ரங்கன் மகன் ஒரு பெரிய கம்பனியில் நல்ல வேலையில் உள்ளன். இன்று ஒரு பாராட்டு. ரங்கன் அந்த கம்பனிக்கு வந்தான். அவன் மகன் வேலன் உடன் வந்து கத்வின் அருகே சென்று தனது இடது கை கட்ட விரல் ரேகை ஒரு machine meeth வைத்தான். ரங்கனுக்கு ஒரே வருத்தம்.நம் குடும்பத்தில் படித்தவனும் கைரேகை போடுகிறான். நான் போட்ட கைரேகை இன்றும் தொடர்கிறது. வருத்தப் பட்டன் ரங்கன் " என்ன தம்பி நீயும் கைரேகை வைக்கிற" நீ பெரிய படிப்பு படித்தத தாக சொன்ன ஆ ஆனா கைரேகை வைகிறேயே அப்பா இப்போ கைரேகைகள் தான் முக்கியம். கையெழுத்து வேண்டாம். அதனால் தான் இந்த கைரேகை இருந்தால் மட்டும் இந்த கதவு திறக்கும் . நாம் உள்ளே போக கைரேகை மிக அவசியம்" ரங்கன் சிரித்தான். சிரித்தான் ரங்கன். என்றுமே பழமை மிக சிறந்தது. இது தெரிய 50 வருடங்கள் தேவை.

Wednesday, May 3, 2017

Koil Annan

Srimathe Ramanujaya Namaha

Our Swami Jagathacharya Sri Ramanuja 1000th year celebrations are going on in the world
His principles are not initiated today but almost 900 years old and till date every one is following the same. During this 1000th year celebrations we must visit atlesast the following main divyadesams
1.Srirengam  Thanana Thirumeni
2. Sriperumputhur  Thanaku ugartha thirumeni
3. Thirunarayanapuram (Melkote Karnataka)  Tham ugarntha thorumeni
4.Srivilliputtur  Koil Annan
5.Thirumal Irumcholai  Ellyalwar
6.Alwarthirunagari   Bhaviyatharar
Alwar Emberumanar Jeer Thiruvadigale saranam